எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அனுமதி சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்தால் ரூபாய் 5000 அபராதமும், அனுமதி சீட்டின் விலையின் இரண்டு மடங்கு கட்டணமும் செலுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களில் புகையிரத போக்குவரத்து இடம் பெறும் அனைத்து பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்ப தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்தார்.