சபான் சிராஜ் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் குறுகிய அரசியல் லாபத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் காட்டி கொடுக்கின்றார் அமைச்சர் றிசாட்... இன்று மலர்ந்திருக்கும் நல்லாட்சி ஊடாக முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்ளாமல் அரசியல் லாபத்துக்காக சிங்கள இனவாதிகளை தூண்டி விட்டு அதில் அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றார் அமைச்சர் ரிசாட்..
ஏன் இன்றைய நல்லாட்சியில் எதிர்கட்சியில் இருக்கும் தமிழ் சமுகம் படிப்படியாக தாம் இழந்த உரிமைகளை நல்லாட்சி அரசோடு பேசி தீர்க்கின்ற போது ஏன் அமைச்சர் ரிசாட்டால் முடியாது ??? வடக்கில் தமிழ் சமுகத்தின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் அரசால் விடுவித்த போதும் சம்பூர் காணி முழுமையாக விடுவித்த போதும் பாயாத இனவாதம் வில்பத்தில் மட்டும் பாய்வது ஏன் ?? இதில் ஒழிந்து கிடக்கும் ரகசியம் தான் என்ன ?? எதிர்ககட்சியில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசோடு பேசித்தானே தன் உரிமைகளை பெறுகின்றது ?? அப்படியானால் ஏன் இது அமைச்சர் ரிசாட்டால் முடியவில்லை ?? தன்னையும் தன் கட்சியையும் வளர்க்க முஸ்லிம் சமுகத்தின் அனுதாபம் தேவைப்படுகின்றது.. தன்னையும் தன் கட்சியையும் வளர்க்க முஸ்லிம் சமுகத்தை காட்டி கொடுத்து வருகின்றார் அமைச்சர் ரிசாட்.. இதில் என்ன வேடிக்கை என்றால் அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது வில்பத்து விவகாரம் மீள்குடியேற்றத்துக்கான பிரச்சினை அல்ல அந்த மக்களை அரசு மீள்குடியேற்றம் செய்யும் என்று.. ஆனால் அந்த அரசோடு பேச முடியாமல் தன்னை வளர்த்துக் கொள்ள இனவாதிகளை தூண்டி விட்டு குளிர் காய்கின்றார் அமைச்சர் றிசாட்.. யாரோ பெயர் தெரியாத தேரரை விவாதத்துக்கு அழைத்து சிங்கள சமுகத்தில் அந்த தேரரை பிரபல்லியப்படுத்தும் வேலையை அமைச்சர் ரிசாட் செய்து வருகின்றார்..
நாய் குரைப்பதற்காக நாமும் குரைக்காமல் நாயின் உரிமையாளரை கண்டு அதற்கான தீர்வுகளை பெற முயற்சிக்காமல் நாயோடு சேர்ந்து குரைப்பதால் ஒட்டுமொத்த நாயும் களத்தில் வரும். இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமுகமே... அமைச்சர் ரிசாட் அவர்கள் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள் இந்த தேரரோடு விவாதிப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினையும் தீர்ந்துவீடுமா ??? இல்லை இந்த தேரரை தொடாந்து இன்னுமொரு தேரர் வருவார் அவரோடும் விவாதம் பன்னுவீர்கள் தொடர்ந்து இப்படி விவாதம் செய்து கொண்டு போனால் முடிவு தான் என்ன ??? நீங்களும் உங்கள் கட்சியும் வளருமானால் முஸ்லிம் சமுகம் அடையபோகும் நன்மைதான் என்ன ?? சகோதரர் அமைச்சர் ரிசாட் அவர்களே தயவு செய்து உங்களிடம் கேற்கின்றோம் உங்கள் அரசியல் லாபத்துக்காக முஸ்லிம் சமுகத்தை காட்டி கொடுக்காதீர்கள்..