2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தான் அலரிமாளிகையில் இருந்ததாகவும், கடல் நீர் ஊருக்குள் வந்துள்ளதாக கூறியும் தான் நம்பவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுனாமி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்தறையில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக தான் தயாராகியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, தங்காலை, மாத்தறை போன்ற பகுதிகளுக்கு சென்று தான் அழிவை பார்வையிட்டதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
வீரகொடிய - கொடதெனிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.