தாஜுதீன் தீர்ப்பில் சிக்கல் - நீதவானுக்கு இடம்மாற்றம்..?

க்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்ற நீதிமன்ற தீர்ப்பை வழங்கவுள்ள கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றின் பிரதம நீதிவான் நிஹால் பீரிஸ் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மாத்தறை மாவட்ட நீதிமன்றுக்கு இடம்மாற்றம் செய்யப்படுவதாகவும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இடம்மாற்றம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற வழமையான இடம்மாற்றம் என நீதி அமைச்சர் தெரிவித்த போதிலும் பிரதம நீதிவான் நிஹால் பீரிஸ் அவர்களின் பெயர் 2016ஆம் ஆண்டு இடம்மாற்றம் செயும் பெயர் பட்டியலில் காணப்படவில்லை.

அண்மைக்காலங்களில் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் என சர்ச்சைக்குரிய பல முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் தீர்ப்பையும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றின் பிரதம நீதிவான் நிஹால் பீரிஸ் இன்று பிறப்பிக்கவுள்ளார்.

இதேவேளை அண்மையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் பிரதமர் ரணில் விகரமசிங்கவிற்கும் பாராளுமன்றத்தில் இரகசிய நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணியா இந்த இடம்மாற்றம் என வழக்கறிஞ்சர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இன்றைய தீர்ப்பை பிற்போடும்படி அல்லது கொலை என்கிற அடிப்படையில் தீர்ப்பை பிறப்பிக்காதபடிக்கு நீதிவான் நிஹால் பீரிஸுக்கு உயர்மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர் இணங்கவில்லை என்பதால் அவருக்கு இடம்மாற்றம் செய்யப்படுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு செய்தித் தளமொன்று தெரிவிக்கின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -