சுலைமான் றாபி-
கணித படத்தின் புரட்சிகர ஆசானும், அபகஸ் பாடத்தின் ஆசானுமான முஹம்மட் அனீஸ் இன்று (27) ஹப்புதளயில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமாகியுள்ளார்.
இவரின் மரணச் செய்தி கேட்டு அவரின் சொந்த ஊரான நிந்தவூர் எங்கும் சோக மயமாக காட்சியளிப்பதோடு, இவரிடம் கல்விபயிலும் மாணவர்களும் இவரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கணித பாடத்தை கற்பிப்பது மட்டுமன்றி அபகஸ் கற்பிப்பதில் தலைசிறந்து விளங்கும் இவர், இவ்வருடம் இடம் பெற்ற அகில இலங்கை ரீதியான போட்டியில் இவரிடம் பயின்ற மாணவியே முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.