மத்தல விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி மின் இணைப்பு அமைப்புக்களின் ஒரு பகுதி சிலரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம் பெற்ற அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போது இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மத்தல விமான நிலைய வீதியில் இரவு நேரங்களில் தெரு விளக்கு ஒளிராமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் 15 இலட்சம் பெறுமதியான நிலத்தடி மின் இணைப்புக்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உப தலைவர் மாகாண சபை அமைச்சர் திலீப் வெதஆரச்சி , தங்கல்ல சிரேஷ்ட காவற்துறை அதிகாரிக்கு தெரிவித்தார்.