மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையினால் யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேச மாணவர்களுக்கான ஆங்கில மற்றும் சிங்கள நான்கு மாத இலவச டிப்ளோமா பாடநெறி சிவில் பிரஜைகள் சபையின் கிரான் காரியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 60 மாணவர்களுக்கான இலவச அனுமதி வழங்கப்பட்டது.
மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இவ்விலச கற்கை நெறியினை அமுழ்படுத்துவதற்கான நடவடிக்கையினை மடக்களப்பு சிவில் பிரஜைகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டுக்கு தடையாக மொழி காணப்படுவதனால் இன ஐக்கியத்திற்கு சிங்கள மற்றும் ஆங்கில கற்கை நெறிகள் துணையாக அமையும் என்ற எண்ணக்கருவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் இன ஐக்கியத்திற்காகவும் சகவாழ்வுக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபை முன்னெடுத்து வருகின்றது.
- சீரெப்.