சம்மாந்துறை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
ம்மாந்துறை, கல்லரைச்சல் 01 கிராம மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் நிதிஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை கல்லரைச்சல் 01 மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி ஏ.எஸ்.பாயிஸா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி. எம்.எம்.சஃபீர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.சரீப் முகம்மட், கிராம சேவகர் செல்வி. எம்.ஏ.சித்தி பஸ்றியா உள்ளிட்ட உயரதிகாரிகளோடு, பிரதேசத்திலுள்ள பெருந்தொகையான மாதர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாதர் சங்கத்திற்குத் தேவையான காரியாலய உபகரணங்கள், அங்கத்தவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் என பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் சேவைகளைப் பாராட்டி, கல்லரைச்சல் 01 கிராம மக்கள் சார்பாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரினால் பொன்னாடைபோற்றி கௌரவிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -