முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் பிணை விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29ம் திகதி குறித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யோசித்த ராஜபக்ஷவுக்கான பிணை மனுவை தாக்கல் செய்ய இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தமை குறுப்பிடத்தக்கது.