ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறாத காரணத்தினால் பிரதான நுழைவரங்கு திருமண விருந்துபசார மண்டபமாக செயற்பட்டு வருகின்றது.
நாளொன்றுக்கு 10000 ரூபா என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளுக்காக குறித்த அரங்கம் வழங்கப்படுகின்றது.
இந்த விளையாட்டு அரங்கம் மூடப்பட மாட்டாது. விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச பயிற்சிகளை நடாத்தக் கூடிய ஓர் மைதானமாக இந்த மைதானத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
சூரியவெவ பிரதேசத்தில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு உசிதமான ஹோட்டல்கள் கிடையாது எனவும் அவ்வாறான ஹோட்டல்கள் நிர்மானிக்கப்பட வேண்டுமென பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.