கடந்த சில தினங்களாக சுதந்திர கட்சி மைத்ரி அணி மற்றும் மஹிந்த அணியினரிடத்தில் நிலவிவந்த முருகல் நிலை உச்சத்தை தொட்டுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
யோசித ராஜபஷவின் கைதைத் தொடர்ந்து சில மஹிந்த அணி உறுப்பினர்கள் அரசாங்கத்தை எல்லை மீறி விமர்சனம் செய்யத் துவங்கியுள்னர்.
இந்த நிலையில் தங்களது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மஹிந்த அணியினருடன் தீவிர ஆலோசனைகளை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திர கட்சியின் எதிராக செயல்படும் அக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மைத்ரி அக்கட்சி செயளாலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்வரும் தினங்களில் சுதந்திர கட்சி பிளவுபடும் என தெரிகிறது.