தேங்காய் உடைக்கச் சென்ற இடத்தில் இப்படியா..?

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக தேங்காய் உடைக்க சீனிகம ஆலயத்திற்கு சென்றிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை திருட்டு போயுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை மாத்திரமல்லாது ஊடகவியலாளர் உட்பட சிலரது பணப் பைகளும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆலயத்தில் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இருவரது பணப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தினேஷ் குணவர்தனவின் பணப்பை காணாமல் போயுள்ளதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்ததை அடுத்து அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் பணப்பை மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் குணவர்தன எவ்வளவு பணம் வைத்திருந்தார் என்பது தெரியவரவில்லை.

சீனிகம ஆலயத்திற்கு தேங்காய் உடைப்பதற்காக சுமார் 1100 பேர் சென்றிருந்ததாக புலனாய்வு தரப்பினர் கூறுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -