ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஆபாசம் வேண்டாம் நெறிமுறையான, ஒழுக்கமான மற்றும் நாகரீகமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொணிப் பொருளில் மக்களது வரைவையும் கையொப்பத்தையும் பெறும் நிகழ்வொன்றினை நியாயமானதும் ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பும், அமம் நிறுவனமும் இணைந்து இன்று (27) காலை 9.00 மணி முதல் காலி பஸ் நிலையத்திற்கு முன்னாள் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் ஹிஸாம் சுகையில் தெரிவிக்கின்றார்.
ஆபாசத்திற்கு எதிரான இந்த தேசிய பிரச்சாரம் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களினால் வழி நடாத்தப்படுவதோடு ஆபாசத்தின் எதிர் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு ஆபாசத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து வெளியேற்ற உதவுவதுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த உதவும் ஒரு தேசிய சேவையாக இது அமைகின்றமையால் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டி நிற்கின்றனர்.