காரைதீவு நிருபர் சகா-
சுகாதாரஅமைச்சர் ராஜிதசேனாரத்ன பூரணசுகமடைய வேண்டி கல்முனை ஆதாரவைத்தியசாலையிலுள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்று விசேடபூஜையும் பிரார்த்தனையும் நடைபெற்றது.
வைத்தியசாலை நிருவாகமும் அபிவிருத்திக்குழுவும் இணைந்து நடாத்திய இவ்விசேட பூஜையும் பிரார்த்தனையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நிரோசன் ஜயா தலைமையில் நடைபெற்றது. நேற்றைய தினம் அமைச்சர் ராஜிதவிற்கு சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது. அவ்வமயம் இச்சிறப்புப்பூஜை இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சிக்கு வழிகோலிய முக்கிய தலைவர்களுள் ஒருவராகிய அமைச்சர் ராஜித இன மத பேதம் பாராது சேவையாற்றிவருபவர். வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரும் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.