இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 100 ரூபா நாணயத்தாளில் இதுகாலம் வரையும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருந்த முதலிடம், இரண்டாம் பட்சமாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இருப்பினும், மத்திய வங்கி இந்தவகையான முறையில் பணத்தாள்களை அச்சிடவில்லையென மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் 2016.03.12 ஆம் திகதி வெளியிடப்பட்டதாக கூறப்படும் புதிய நாணயத்தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பணத்தாள்களில் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷவே கையொப்பமிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநராக சுனில் மெண்டிஸ் ஒப்பமிட்டுள்ளார். சுனில் மெண்டிஸ் என்பவர் 2004 ஆம் ஆண்டிலேயே மத்திய வங்கியின் ஆளுநராக சேவையாற்றியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் வெளியான இனவாதத்தைத் தூண்டும் போலியான பிரச்சாரத்துக்கு சிங்கள செய்தி ஊடகமொன்று இவ்வாறு பதிலளித்துள்ளது.dc