130 ஆண்டுகளின் பின் பதிவான அதிகளவு வெப்பநிலை - நாசா

மெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பெப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அளவானது கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பெப்ரவரி மாதத்தில் பதிவான அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது. 

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

1880ம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -