ஒரே குடும்பத்தினர் 14 பேரை கொன்று, தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர் - விசாரணையில் பரபரப்பு தகவல்

ரே குடும்பத்தில் 14 பேரை கொடூரமாக கொன்று குவித்த பட்டதாரி வாலிபர் அஸ்னேன், உடன் பிறந்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மும்பையை அடுத்த தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த 35 வயது பட்டதாரி வாலிபர் அஸ்னேன், தன்னுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என 14 பேரை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆட்டை அறுக்கும் கத்தியால் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டையே உறைய வைத்த இந்த சம்பவத்தில் அஸ்னேனின் சகோதரி சுபியா (வயது 22) மட்டும் உயிர்பிழைத்தார். அஸ்னேனின் இந்த படுபாதக செயலுக்கு அவரது மனநிலை கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதுபற்றி உயிர்பிழைத்த சுபியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக தானே போலீஸ் இணை கமிஷனர் ஆசுதோஷ் தும்பரே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அஸ்னேன் ஏற்கனவே பன்முக மனநிலை கொண்டவராக இருந்திருக்கிறார். மேலும், தன்னுடன் பிறந்த சகோதரியான, பத்லுவுடன் வலுகட்டாயமாக அவர் தகாத உறவில் ஈடுபட்டிருக்கிறார். பத்லு மனநிலை பாதிக்கப்பட்டவர். அஸ்னேனின் இந்த பாலியல் தொல்லை குறித்து பிற சகோதரிகளிடம் பத்லு கூறி இருக்கிறார். இந்த தகவல் அஸ்னேனுக்கு தெரியவந்திருக்கிறது.

விஷயம் வெளியில் தெரிந்தால், அவமானமாகி விடும் என்று கருதிய அஸ்னேன், குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ய தீர்மானித்து ஒன்றாக திரட்டி இருக்கிறார். அந்த படுபாதக செயலை அவர் அரங்கேற்றிய போது, சுபியா தனியறையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவரது தாயாரின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது.

உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அவரை கொலை செய்ய அஸ்னேன் தயாராக இருந்திருக்கிறார். அப்போது, ‘உன்னை பெற்றதற்காக என்னை மட்டுமாவது உயிருடன் விடு’ என்று அவரது தாயார் மன்றாடியிருக்கிறார். ஆனாலும், இதனை பொருட்படுத்தாத அஸ்னேன், பெற்ற தாயையே கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறார்.

தொடர்ந்து சுபியாவை நெருங்கி, அவரையும் கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஒரு வழியாக சுபியா தப்பி, வேறு ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு உயிர்பிழைத்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, அஸ்னேன் சொந்தமாக தொழில் தொடங்கும் நோக்கத்தில், தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடம் இருந்து ஏறத்தாழ ரூ.67 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். இதனால், அவர் கடன்சுமையிலும் சிக்கி தவித்திருக்கிறார்.

இது தவிர, பங்கு வர்த்தகத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதில் அவருக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டதா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு, மஜிவாடா பகுதியில் அறை ஒன்றை அஸ்னேன் வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

ஆனால், அங்கு என்ன செய்தார்? என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரையில், தடயவியல் அறிக்கை வந்த பின்னரே, பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

இவ்வாறு ஆசுதோஷ் தும்பரே தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -