கஹட்டோவிட்டவில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கிவருகின்ற முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2016 தொடக்கம் ஆரம்பமாகவிருக்கின்ற,
முழு நேர ஆலிமா பாடநெறிக்கு க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவிகளிடமிருந்தும், பகுதி நேர ஆலிமா பாடநெறிக்கு தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவிகளிடமிருந்தும், முழு நேர ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகளுக்கு பாடசாலையில் இருந்து விலகிய அல்லது பாடசாலைக் கல்வியை முடித்த மாணவிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆலிமா பாடநெறியினைத் தொடரும் மாணவிகளுக்கு:
க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் வசதி
தையல் பயிற்சி
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சி
கணனி பயிற்சி நெறி
உளவியல் பயிற்சி நெறி
போன்றன அளிக்கப்படும்.
விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் கல்லூரியிலும், www.muaskarurrahman.com என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி: 17/04/2016
இவ்வண்ணம்,
நிர்வாகம்,
முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி,
கஹட்டோவிட்ட,
தொ.பே. எண்: 033 - 2278384.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -