24 வருடங்களுக்கு முன் சவுதி சென்ற பெண், சடலமாக நாட்டுக்கு அனுப்பி வைப்பு..!

24 வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண் ஒருவரின் சடலம் விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆணைமடு – மஹாஉஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இவர் 1992 ஆம் அண்டு பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

எனினும் இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக அவர் பற்றி எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர் இறந்திருக்க கூடும் என நினைத்து உறவினர்கள் சமய சடங்குகள், தானம் போன்றவற்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -