வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி கவியரங்கின் 25வது கவியரங்கு கொழும்பு குணசிங்கபுர அல்ஹிக்மா கல்லூரியில் கவிஞர் சுபத்திரன் அரங்கில் 22-02-2016 அன்று நடைபெற்றது. கலாநிதி ந.இரவீந்திரன் சிறப்பதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார்.
கவிஞர் சுபத்திரன் அரங்கில் சிறப்புரையாற்றிய கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள்,
“இன்று சுபத்திரனை நினைவிலெடுத்து சுபத்திரன் அரங்கு என அமைத்திருப்பதற்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். கவிஞர் சுபத்திரனை மறந்திருக்கும் இவ்வேளையில் அவர் நினைவு கூரப்படுவது போற்றதற்குரியது. கவிஞர் சுபத்திரன் மறக்கப்பட்டிருந்த 90களின் ஆரம்பத்தில் முற்போக்கு இயக்கம் ஒரு முழு நாள் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஒரு பேராசியரியர் இலங்கை கவிதை வரலாறு பற்றி நீண்ட ஆய்வுரை நிகழ்த்தினார்.
அதில் மஹாகவி பற்றி 75 வீதம் பேசப்பட்டது. மற்றைய கவிஞர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. என்றாலும் சுபத்திரன் பற்றி ஒரு சொல்லாவது சொல்லப்படவில்லை. அதனை வன்மையாக கண்டித்து நான் உரையாற்றினேன். பேராசிரியர் குறிப்பிட்ட கவிஞர்களைவிட காலத்தின் யதார்த்தத்தை துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவர் சுபத்திரனே என்று வாதாடினேன்.
சமூக பெறுமானத்தைக் காட்டாத எந்தக் கவிதையும் எதற்கு ? சுபத்திரனுடைய கவிதைகளே சமூக பெறுமானத்தகை காட்டும் போரட்டக் கவிதைகளாய் இருந்தன. தன் போராட்டத்தில் உச்சத்துக்குப் போனவன் கவிஞர் சுபத்திரன்.” என்று கூறினார்.
தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் வெலிப்பன்னை அத்தாஸ் தலைமையில் வகவத்தின் 25வது கவியரங்கு சிறப்பாக நடந்தது.
கவிஞர்கள் மதியன்பன் மஜீத், இப்னு அஸூமத், எம்.பிரேம்ராஜ், ரவூப் ஹசீர், எம்.ஏ.எம்.ஆறுமுகம், சங்கர் கைலாஷ், எஸ்.ஏ.கரீம், மட்டக்களப்பு க.லோகநாதன், வெளிமடை ஜஹாங்கீர், எம்.எஸ்.அப்துல் லத்தீப், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான், போருத்தொட்ட ரிஸ்மி, கிண்ணியா அமீர் அலி, இளநெஞ்சன் முர்ஷிதீன், ஏ.எஸ்.எம்.நவாஸ், ஏ. இளங்கோ, தெல்தொட்ட ரி.என்.இஸ்ரா, புல்மோடை யாசீர் எம்.ஹனீபா, எம்.எஸ்.தாஜ்மஹான், வதிரி சி.ரவீந்திரன், மேமன்கவி ஆகியோர் கவி மழை பொழிந்தனர். வை. சுசீலாவின் கவிதையும் வாசிக்கப்பட்டது.
வகவ கவிஞர்கள் கலாபூஷணம் எஸ்.ஐ நாகூர் கனி, கலா விஸ்வநாதன், ஈழகணேஷ் ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வகவ ஸ்தாபகத் தலைவர் தாஸிம் அகமது, மாவனல்ல உ. நிசார், கலைவாதி கலீல், ஏ.ஸி.எம்.சுபியான், க.சோமசுந்தரம், எம்.எஸ்.எம்.ஜின்னா, முல்லை முஸ்ரிபா, சனா எம். யெஹ்யா, ஏ.எம்.யேசுரட்ணம், எம்.எஸ்எம்.ரிஸ்மி, ரினோஸா நௌஸாட், ஏ.எம்.எஸ்உதுமான், அலி ஜின்னாஹ், உவைஸ் ஷரீப், கவிநேசன் நவாஸ், எஸ் சப்ரி, எம்.எல்.கே. ரஹுமான், எல்.கோகுல், பி. நேத்தன், எம்.எம்.எம். இல்யாஸ், எம்.எம்.பாயிஸ் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.