ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சி நிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நீர் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதன் காரணமாக மழை வேண்டிய விஷேட தொழுகை ஒன்றினை பெற்ற மஸ்ஜிதுகள் சம்மேளனம், புதுக்கடை மஸ்ஜிதுகள் சம்மேளனம் மற்றும் மத்திய கொழும்பு ஜமியதுல் உலமா சபைக் கிளை என்பன இணைந்து கொழும்பு-12. குணசிங்கபுரத்தில் உள்ள குணசிங்க விளையாட்டு மைதானத்தில் நாளைக் (27) காலை 9.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வில் மழை வேண்டிய இஸ்திஸ்காயி எனும் மழை தேடித் தொழும் தொழுகையை மௌலவி ஹஸன் பரீத் நடாத்தி வைக்கவுள்ளார். எனவே இத்தொழுகைக்கு அனைவரையும் அழைப்பதுடன் வருபவர்கள் வுளுச் செய்து கொண்டு விரித்துத் தொழுவதற்கு முஸல்லாவுடன் வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.