ஹிக்கடுவை, களுபே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்த மூவரும் உறவினர்கள் என்பது ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காணிப் பிரச்சினை காரணமாக அமைந்துள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.