4 ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 8 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 8 சுத்திகரிப்பாளர்களும் நியமிப்பு..!

அபு அலா –
ல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலை நான்கிற்கு 8 சுத்திகரிப்பாளர்களும், 8 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் இன்று (06) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, தம்பிலுவில் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை, சம்மாந்துறை ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு தலா 2 வீதம்படி 8 சுத்திகரிப்பாளர்களும், தலா 2 வீதம்படி 8 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுமே நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த மாதம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் குறித்த ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் நேற்று (05) வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -