அபு அலா,ஏல்.எல்.எம்.நபார்டீன் -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் நிதியொதுக்கீட்டின் கீழ் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் 44 வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அத்தியவசியத் தளபாடங்களை சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் கையளித்து வைக்கப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் இன்று (09) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
6 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட இந்த வைத்திய உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அத்தியவசியத் தளபாடங்கள் கையளித்து வைக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (10) கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்தின் கீழ் இயங்கும் தள வைத்தியசாலை – 03, மாவட்ட வைத்தியசாலை – 11, ஆரம்ப பராமரிப்பு பிரவு வைத்தியசாலை – 12, விஷேட வைத்திய சேவைப் பிரிவு – 05 மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் – 13 போன்றவற்றுக்கு இந்த உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.
இந்த வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 44 வைத்தியசாலைகளின் வைத்திய பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.