கல்பாத வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டி களுபோவில வைத்தியசாலைக்கு சென்று வரும் வழியில் பிலியந்தல, படுவந்தர பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பிலியந்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டர் வாகனம் இரண்டிலும், மோட்டார் சைக்கிள் இரண்டிலும் வந்த குழுவினர் அம்பியுலன்ஸ் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரை எச்சரித்துவிட்டு, தாக்குதலும் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பிலியந்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்களிடையே பாடசாலை மாணவர்கள் இருவர் காணப்படுவதாகவும், இவர்கள் அந்த வேளையில் மது போதையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.