சகா-
இந்திய வைத்தியநிபுணர்களின் பங்கபற்றுதலுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் காதுமூக்கு தொண்டை வைத்தியமுகாமின் இரண்டாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை பெருநச்திரளான நோயரிகளுடன் இடம்பெற்றது.
நேற்று 24பேருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றது.காதுமூக்குதொண்டை பிரதேசங்களில் ஏற்பட்ட உபாதைகளுக்கு சத்திரசிகிச்சை நடைபெற்றது.
இந்திய வைத்தியநிபுணர்களே இச்சத்திரசிகிச்சையை செய்தனர்.
இன்றும் நாளையும் தொடர்ந்து சத்திரசிகிச்சை நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி அபயவங்களில் பிரச்சினை உள்ளவர்கள் எதிர்வரும் 3தினங்களுக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குவந்து தேவையான சிகிச்சையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியுமென முகாம் இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
50நோயளிகளுக்கு காதுகேட்கும் இயந்திரம் வழங்கப்படுவதற்கு சிபார்சுசெய்யப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பணநிகழ்வு!
முகாமின் அங்குரார்பப்ணநிகழ்வு முதல்தினமான நேற்றுமுன்தினம் 7ஆம் திகதி கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் றோட்டரியன் சீனித்தம்பி அழகுராஜா ஆரம்பமாகியது.
பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான றோட்டரி மாவட்டம் 3220ற்கான றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் ஜோர்ஜ் ஜேசுதாசன் ஆகியோர் கலந்துசிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக கொழும்பு வடக்கு றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ஜவோ குணதிலக கொழும்புவடக்கு றோட்டரிக்கழக தொழில்பயிற்சி பிரிவிற்கான தலைவர் றோட்டரியன் பி.பி.தயானி பனாகொட ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடஇந்திய றோட்டரிக்கழக மனிதகுலசேவையின் ஓரங்கமாக வடஇந்தியாவின் ராஜஸ்தான் மாநில சிறப்பு வைத்திய நிபுணர் டாக்டர் விக்றன்ற் முத்தூர் தலைமையிலான நிபுணர்கள் குழுவில் டாக்டர்களான பியானிமுத்தூர் இன்ரர்பிரசாத்சிங் கல்பிற்றிசிங் சோப்ராகோபால்தாஸ் ஆகிய 5 நிபுணர்கள் சமுகமளித்திருந்தனர்.
கல்முனை ஆதாரவைத்தியாசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வரவேற்புரையினையும் நோட்டரியன் அழகுராஜா தலைமையுரையினையும் நிகழ்த்தினர்.
களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவி வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் ஜவோ குணதிலக பி.பி.தயானி பனாகொட வைத்திய நிபுணர் டாக்டர் விக்றன்ற் முத்தூர் ஆகியோர் உரையாற்றினர்.
மனிதகுலசேவையாளர்கள் பொன்னாடைபோர்த்தி பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியினை வி.ரி.சகாதேவராஜா தொகுத்து வழங்கினார்.