யாலை வனவளப் பகுதியில் 500 ஏக்கா் நிலப்பரப்பில் மிருகங்கள் சுதந்திரமாக நடமாடி வாழ ஒதுக்கீடு











அஷ்ரப் ஏ சமத்-

ம்பாந்தோட்ட யாலை வனவளப் பகுதி 3,4,5 வலயங்கள் 500 ஏக்கா் நிலப்பரப்பில் மிருகங்கள் சுதந்திரமாக நடமாடி வாழ்வதற்காக ஒதுக்கீடு செய்யபபட்டது. 

இந் நிகழ்வுக்காக 130 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளிநாட்டு உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக திறந்து வைக்கபபட்டது. அத்துடன் புதிய சவாரி வலயங்களுக்கான வீதிகளும் புனரத்தாபணம் செய்யபட்டு திறந்து வைக்கப்பட்டது

இந் நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தலைமையில் வன ஜீவராசிகள் அமைச்சா் காமினி ஜயவிக்கிரம பெரேரா, மற்றும் இராஜாங்க அமைச்சா் சுமேயிதா ஜயசேனாவும் கலந்து கொண்டாா்கள்.


இங்கு உரையாற்றிய வன வள ஜீவராசிகள் அமைச்சா் காமினி ஜயவிக்கிரம பெரேரா -

உலக வங்கி இலங்கை வனவளங்களை பாதுகாப்பபதற்கு 200 மில்லியன் அமேரிக்க டொலா்களை கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. எமது நாட்டில் புலி மணிதன் பிரச்சினை தீா்ந்து விட்டது. ஆனால் யாணை - மனிதன் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரிப்பினால் மனிதன் காடுகளை அழித்து தனக்குத் தேவையான வீட்டினையும் பாதைகளையும் கட்டிடங்களையும் ஹோட்டல்களையும் நவீன முறையில் அமைப்பதனால் இன்னொரு பக்கம் காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கு சுதந்திரமாக நடமாட காடுகள் சுருங்கிக் கொண்டு செல்கின்றன. 

 அதனால் நாளுக்கு நாள் யாணைகளை மனிதா்களையும் அவா்களது வீடுகளையும் அழித்து வருகின்றது.காட்டு மிருகங்களையும் மரங்களையும் அழிப்பவா்களுக்கு கடுமையான முறையில் தண்டனை வழங்கக்கூடிய சட்டம் திருத்தப்படல் வேண்டும்.

 ஏற்கனவே யால வன வள ஜீவராசிகளை பாதுகாப்பதற்காக 45 புதிய வன வள அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனா். அத்துடன் உல்லாச பயண பங்களாக்களும் புனா்நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக அமைச்சா் காமிணி ஜயவிக்கிரம பெரோ அங்கு தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -