ஊடகபிரிவு-
பெருந்தோட்டத்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐந்தாண்டு தேசிய செயற்திட்டத்ததை நடைமுறைபடுத்தல் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஓன்று கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை, அமைச்சரின் ஆலோசகரும் ஐந்தாண்டு தேசிய செயற்திட்ட தயாரிப்பாளருமான திரு. வாமதேவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட பகுதிகளில் இயங்கும் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்குழுவிற்கு சிந்தனை குழாம் என பெயரிடப்பட்டது.
ஐந்தாண்டு தேசிய அபிவிருத்தி தி;ட்டத்திதை நடைமுறைபடுத்தல் குறித்தும், இத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பிலும், திட்டத்திற்கு வெளிநாட்டு நிதி உதவி பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஏனைய அமைச்சு மட்டத்தில் ஐந்தாண்டு தேசிய செயற்தி;ட்டத்திற்கு எவ்வாறு உதவி பெறுவது என்பது தொடர்பிலும், மாணவர்கள். ஆசிரியர்கள் மத்தியில் பிரச்சாரங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து ருNனுP நிறுவனத்திற்கு தெளிவுபடு;த்தப்படவுள்ளது.
மேலும், இவ்வாறான கூட்டத்தினை மாவட்ட மட்டத்தில், பிரதேச மட்டத்தில் நடத்துவது குறித்து பேசப்பட்டது. அடுத்;த சிவில் சமூக சிந்தனை குழாம் கலந்துரையாடல் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.