பெல்ஜியம் தாக்குதல் : 6வர் அதிரடியாக கைது

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக 6 சந்தேகத்திற்குரிய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதுடன், 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் தப்பி தலைமறைவாக இருப்பதாக பிரஸ்சல்ஸ் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று மாலை நேரத்தில் Schaerbeek நகரில் உள்ள ஒவ்வொரு வீடாக பொலிசார் அதிரடி சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையின் முடிவில் தாக்குதலில் ஈடுப்பட்டதாக சந்தேகப்படும் 6 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதே சமயம், பிரான்ஸ் தலைநகரான பாரீஸிலும் தாக்குதலை நடத்த திட்டமிட்ட நபர் ஒருவரையும் அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசார் 6 பேரையும் கைது செய்திருந்தாலும், அவர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களை பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -