மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 72 பணியாளர்கள் இன்று நாடு திரும்பினர்..!

த்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்று நிர்க்கதியான இலங்கைப் பணியாளர்கள் 72 பேர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று திங்கட்கிழமை (28) மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

50 பெண்கள் மற்றும் 22 ஆண்கள் அடங்கலாக, குவைத்திலிருந்து 48 பேரும் சவுதி அரேபியா மற்றும் கட்டாரிலிருந்து தலா 12 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இப்பணியாளர்களுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்படாததுடன், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -