ஆர்ஜென்டினாவில் 8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை அருகில், இருந்தவர்கள் பார்த்து அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்து உள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். நிர்வாணமாக, நடுத்தெருவில் வைத்து அவரின் இரு கைகளையும் கட்டி வீதியில் அனைவரும் பார்க்கும்படி பொலிஸாரிடம் அவரை மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
கூடி இருந்த மக்கள் ஆவேசமாக நாங்கள் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் என கூச்சலிட்டுள்ளனர். மேலும், சிலர் அச்சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது என்று கூச்சலிட்டுள்ளனர்.