இலங்கை தமிழ் கவிஞர்கள் 82 பேரின் கவிதைகள் அடங்கிய "மானுடம் பாடும் கவிதைகள்" - நூல் வெளியீடு

லக கவிதை தினம் - 2016 நிகழ்வு மார்ச் 21ம்தேதி திகதி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தாமரைத் தடாகத்தில் மிக பிரமாண்டமாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை தமிழ் கவிஞர்கள் 82 பேரின் கவிதைகள் அடங்கிய " மானுடம் பாடும் கவிதைகள்" எனும் கவிதை நூலும் முதல் முறையாக வெளியிடப்பட்டது விசேட அம்சமாகும். உலக கவிதை தின விழாவிலே சிங்கள கவிஞர்களின் நூல் வெளியிடப்படுவதுபோன்றே தமிழ் கவிஞர்களின் நூலும் வெளியிடப்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் கவிஞர் மேமன் கவியும், கவிஞர் வதிரி சி. ரவீந்திரனும் ஆவார்கள். அக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது அதற்கான சகல பணிகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டு பல சிரமங்களுக்கு மத்தியில் இந் நூலினை மிகவும் நேர்த்தியாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். மிகவும் சிறப்பாக வெளிவந்திருக்கும் இக் கவிதை நூலில் -

கவிஞர்கள் ---

1. கல்வயல் வே. குமாரசாமி

2. கலைவாதி கலீல் 

3. அனார் 

4. வேலணையூர் தாஸ் 

5. கலைமகன் பைரூஸ் 

6. எஸ்.பி.பாலமுருகன் 

7. பொத்துவில் அஸ்மின் 

8. பழனியாண்டி கனகராஜா 

9. ஏ. நஸ்புள்ளாஹ் 

10. ப. மதிபாலசிங்கம் 

11. பாலமுனை பாறூக் 

12. சிவகௌரி புஸ்பராசன் 

13. காத்தான்குடி பௌஸ் 

14. யோ.புரட்சி 

15. அஜ்னபி 

16. கனிவுமதி 

17. பஸ்லி ஹமீட் 

18. சிவலிங்கம் சிவகுமாரன் 

19. கல்முனை நஸீறா அலி 

20. மன்னார் அமுதன் 

21.எம்.ஐ.எம்.அஷ்ரப் 

22. சச்சிதானந்தம் கஜன் 

23. அஸ்ரபா அஸ்ரப் அலி 

24. மு. யாழவன் 

25. வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

26. ஸ்ரீ. பிரசாந்தன் 

27. எம்.எல்.எம்.அன்ஸார் 

28. மைதிலி தயாபரன் 

29. தாஹிர் நூருல் இஸ்ரா 

30. விஸ்வலிங்கம் பிரசாந்தன் 

31. கியாஸ் ஏ. புஹாரி 

32. த. ராஜ்சுகா 

33. ஈழக்கவி நவாஷ் 

34. வதிரி சி. ரவீந்திரன் 

35. ஸக்கியா ஸித்திக் பரீத் 

36. க. லோகநாதன் 

37. சமூகஜோதி எம்.ஏ.றபீக் 

38. பூனாகலை நித்தியஜோதி 

39. தாஸிம் அகமது 

40. அகளங்கன் 

41. வெலிப்பன்னை அத்தாஸ் 

42. பிரேம்ராஜ் 

43. என்.நஜ்முல் ஹுசைன் 

44. நதீரா ரோஷினி நல்லபெரும 

45. ரீ.எல்.ஜவ்பர்கான் 

46. கலா விஸ்வநாதன் 

47. போறுதொட்டை றிஸ்மி 

48. ஈழகணேஷ் தர்மலிங்கம் 

49. பிரோஸ்கான் 

50. ச.தனபாலன் 

51. சியானா சனூன் 

52. சு.தவச்செல்வன் 

53. பாத்திமா அப்ரா இலியாஸ் 

54. மு.சடாட்சரன் 

55. வெளிமடை ஜஹாங்கீர் 

56. கா.சிவலிங்கம் 

57. கெகிராவ ஸஹானா 

58. செல்வராசா மதுரகன் 

59. அஷ்ரஃப் சிஹாப்தீன் 

60. த.ஜெயசீலன் 

61. யாழ் அஸீம் 

62. கலையழகி வரதராணி 

63. முல்லை முஸ்ரிபா 

64. புலோலியூர் வேல் நந்தன் 

65. எஸ்.ஐ.நாகூர் கனி 

66. இளநெஞ்சன் முர்ஷிதீன் 

67. சிபானா காதர் 

68. எஸ். ஜனூஸ் 

69. நாச்சியாதீவு பர்வீன் 

70. கவிநேசன் நவாஸ் 

71. இப்னு அஸூமத் 

72. மணால் 

73. ஞானம். பிருந்தாவனன் 

74. கவிக்கமல் 

75. தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா 

76. வதிரி கண எதிர்வீரசிங்கம் 

79. எம்.ஐ. உஸனார் ஸலீம் 

80. ஆனந்தத்தில் ஒரு அனல் 

81. காத்தான்குடி றுஷ்தா 

82. மேமன் கவி

ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இக் கவிதை நூலை வெளியிடுவதற்கு தமிழ் மொழியின் சார்பில் துணை நின்ற கவிஞர்கள் மேமன் கவி, வதிரி சி. ரவீந்திரன் ஆகியோருக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந் நூல் சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிய கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அனூஷா கோகுல பிரனாந்து அவர்களும் நன்றிக்குரியவர்.

அத்துடன் இம்முறை முதன் முறையாக இவ்விழாவில் கௌரவிக்கப்பட்ட நமது மூத்த கவிஞர்களான கல்வயல் வே.குமாரசாமி அவர்களுக்கும், கலைவாதி கலீல் அவர்களுக்கும் சிங்கள கவிஞர்களுக்கு வழங்கப்பட்டது போன்றே ரூ. 25,000/- (இருபத்தைந்தாயிரம்) பொற்கிழி வழங்கப்பற்றிருக்கிறது என்பதுவும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் விடயமாகும்.

என். நஜ்முல் ஹுசைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -