தன்னிடம் சுமார் 8 மணித்தியாலங்கள் நின்ற நிலையில் வைத்து பாரிய நிதி மோஷடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று விசாரணை மேற்கொண்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களிடம் அறிவித்தார்.
ரக்னா லங்கா தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி மோசடிகள் குறித்து இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது கன்னியுரையில், வெள்ளைக் கொடி தொடர்பில் குறிப்பிட்டிருந்தமை குறித்து அவரிடம் ஊடகங்கள் வினவியதற்கு,
இது இன்று நேற்றல்ல யுத்தம் முடிவடைந்த காலம் முதல் என் மீது சுமத்த எத்தனிக்கும் குற்றச்சாட்டுக்கள்.
சத்தியம் ஒரு நாள் வெளியே வரும்.
வெள்ளைக் கொடியை விசாரணை செய்வதுடன், லசன்த கொலையையும் விசாரணை செய்தால் அதனை விட நல்லதாக இருக்கும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.