யு.எல்.எம். றியாஸ்-
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் (Ampara District Journalists' Forum ) ஒன்று கூடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு (22.03.2016) பொத்துவில் அருகம்பையில் நடைபெறவுள்ளது.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.பகுறுதீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் போரத்தின் எதிர்கால செயற்பாடுகள்,அங்கத்தவர்களின் நலன் சார் விடயங்கள் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, இக்கூட்டத்தில் புதிதாக 06 ஊடகவியலாளர்கள் இணைய இருப்பதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் (Ampara District Journalists' Forum) செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் தொிவித்தார்.