மகிந்த சென்றதைப் பொறுத்துக்கொள்ளாத கல்...!

மகிந்த ராஜபக்ச, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது’ என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த மகிந்த ராஜபக்சவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது.

எனினும், கடந்த 17ஆம் திகதி ஹைட்பார்க்கில் நின்று கொண்டு, நாட்டைத்தா, நாட்டைத்தா என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு மன்றாடினார். அதனை பொறுத்துக் கொள்ளாது மற்றைய கல்லும் வெடித்து விட்டது’ என்றார். இதன்போது அவையில் அருந்த இணைந்த எதிரணியினர், ’17க்கு அச்சமடைந்து விட்டீர்களா? அச்சமடைந்து விட்டீர்களா?’ என்று கோஷமிட்டனர். இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ‘ஆம், ஆம், அன்று மது அருந்திவிட்டு வீதிகளில் புரண்டு புரண்டு ஆட்கள் சென்றதை நாம் கண்டோம். அதன் சாபக்கேடே, நாட்டில் தற்போது வரட்சி நிலவுகின்றது’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -