யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு...!

ந.குகதர்சன்-
ல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரைக் கோட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாணவர்களுக்கு கனடா சிடாஸ் அமைப்பினரால் துவிச்சக்கர வண்டிகள் புதன்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் செல்வி. எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரைக் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான க.சுரேஸ், வணபிதா ஏ.நவரெட்ணம் மற்றும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாகரைக் கல்விக் கோட்டத்திலுள்ள மிகவும் தூர இடத்திலிருந்து பாடசாலைக்கு எதுவித போக்குவரத்து வசதிகளுமின்றி நடந்து வரும் மாணவர்களின் நலன் கருதி நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 30 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியான மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதில் முதலாது பிரச்சனையாக போக்குவரத்து பிரச்சனை முக்கிய இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவ் உதவியை வழங்கி வைத்த கனடா சிடாஸ் அமைப்பினரு தங்களுடை நன்றிகளைத் தெரிவிப்பதாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -