சம்பந்தன் தமிழ் பேசினாலும்: நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்

சப்றின்-

மிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் கூறி இருப்பது அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தொவித்துள்ளார்.

எஸ்.எம்.சபீஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்ககையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், எங்களது பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன முற்றாக வேறான ஒன்றாகும்.

பெரும்பான்மை சிங்கள மக்களால், சிறுபானமையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடகிழக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை சம்பந்தனால் மறுக்க முடியுமா?

இனியும் எம்மக்களால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க நாங்கள் முட்டாள்களும் இல்லை. ஏனென்றால், இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட குறைந்தது 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள், இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும், கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? இல்லையே ;

ஆனால் அம்மக்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மறுநாள் கொடூரப் புலிகள் ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது அந்த நண்பர்கள்தான் என்பதனை உங்களால் மறுக்க முடியுமா?

வரலாறுகளை திரும்பிப் பாருங்கள் உங்களுக்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும். பள்ளி வாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல்காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மூச்சு விடாமல் எங்களால் உதாரனங்களையும் இசம்பவங்களையும் கூற முடியும்.

உங்களை நாங்கள் பலமுறை சோதித்துப் பார்த்து விட்டோம் நீங்கள் தங்கமல்ல ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மண் கிழக்கு மக்களுக்குச் சொந்தமானது அதனை இணைப்பதற்கு ஒரு காலமும் அங்கீகரிக்க முடியாது. 

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ நியாம் கேட்கும் நீங்கள் முஸ்லிம் மக்களையும் அங்கு வாழுகின்ற ஏனைய சிறுபான்மை மக்களையும் அடக்கியாள வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -