திருகோணமலை அலஸ்தோட்டத்தில் ரூபா 400 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்குரிய சுற்றுலா விடுதி மற்றும் சுற்றுலா தகவல் மையம் என்பன இம்மாதம் 31 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுகளில் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லன்சா, அரச நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்ற உள்ளார்கள்.
திருமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.