அக்கரைப்பற்று பெண் சட்டத்தரணியின் தற்கொலை தொடர்பில் பிரேத பரிசோதனை..!

பெண் சட்டத்தரணி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் (21) திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் பிரேத பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் பக்கசார்பாக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் தலைமையில் மீண்டும் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அக்கரைப்பற்று -07 ம் பிரிவு கலாச்சார மண்டப வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய லோகராஜா நிதர்ஷினி என்பவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது;

குறித்த பெண் சட்டத்தரணியாக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் கடமையாற்றி வருகின்றதுடன் திருமணம் முடித்து கடந்த 6 மாதங்களான இவர்; அக்கரைப்பற்று 8 ம் பிரிவு வைரமுத்து வீதியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார் இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் கணவன் மனைவிக்குள் வாய்த்தரக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் வீட்டின் அறையில் சென்று கதவை பூட்டியுள்ளார்.

பின்னர் கதவை நீண்டநேரம் திறக்காதால் கணவன் சந்தேகம் கொண்டு தமது குடும்ப நண்பனாண இன்னுமொரு சட்டத்தரணியை வரவழைத்துள்ளார் சட்டத்தரணியும் அவரின் மனைவியும் வந்து கதவை திறக்காததையடுத்து வேறு திறப்பை எடுத்து கதவை திறந்து உட்சென்றபோது ஜன்னல் அருகில் சாய்ந்து நிற்பதாக நினைத்து அவரை தொட்டபோது அவர் ஜன்னலில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதேவேளை அவருக்கு உயிர் இருப்பதாக சட்டத்தரணியும் அவரது மனைவியும் தூக்குச் முடிச்சை அகற்றி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்துள்ளார் என அக்கரைப்பற்று பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட மேலதிக நீதிபதியுமான திருமதி நலினி கந்தசாமி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைத்தனர். 

இருந்தபோதும் அம்பாரை சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சருக்கு இவ் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் ஒரு பக்கசார்பாக இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர் தலைமையில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மீண்டும் சடலத்தை இன்று அம்பாரை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

சடலத்திற்கு பொலிஸ் காவல் அளிக்கப்பட்டு வருவதுடன் சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -