அட்டாளைச்சேனை பிரதேச சம்மேளனக் கூட்டமும் நிருவாக சபை தெரிவும்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
திர் கால இளைஞர்கள் எங்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுகின்ற போது எதிர் காலத்தில் எமது பிரதேசத்தில் ஆளுமைமிக்க , திறமையான இளைஞர்களை நாம் உருவாக்க முடியும் என அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.டி.எம். ஹாருன் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 2016 ம் ஆண்டுக்கான பிரதேச சம்மேளன கூட்டமும் நிருவாக சபை தெரிவும் பிரதேச சம்மேளன தலைவர் யு.எல்.எம். சபிர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒலுவில், பாலமுனை, ஆலங்குளம், தீகவாபி போன்ற பிரதேசங்களை பிரதிதுவப்படுத்தும் வகையில் நிறுவாக சபை தெரிவு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதகாரி யு.எல்.ஏ.மஜீட், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சித்தி நழீறா, எம். எம். நாசர் அலி, ஏ.எல்.எம். நிம்சத் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -