எய்ட்ஸ் வதந்தி குருநாகல் மாணவனுக்கு - கண்டி திருத்துவக்கல்லூரி அனுமதி

ய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தி காரணமாக பல பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள குளியாப்பிட்டி மாணவனிற்கு கண்டி திருத்துவக்கல்லூரி அனுமதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

குறிப்பிட்ட சிறுவனை திருத்துவகல்லூரியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பழையமாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை குறிப்பிட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அறிவித்துள்ளனர்.

மேலும் அந்த மாணவனின் எதிர்கால கல்விக்காக நிதியமொன்றை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் பெற்றோர்களின் எதிர்ப்பை தொடர்ந்து குருநாகலின் பாடசாலையொன்றிலிருந்த அந்த மாணவனை கல்வி அதிகாரிகள் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -