க.கிஷாந்தன்-
ஆசிரியையொருவரது தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும், நீதிபதி சம்பிக்க ராஜபக்ச அந்நபரை, எதிர்வரும் 31ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இத் தங்கச் சங்கிலி அறுப்பு சம்பவம், பசறையின் புற நகர்ப்பகுதியில் 28.03.2016 அன்று இடம்பெற்றுள்ளது.
பசறைப் பொலிசார் துரிதமாக செயல்பட்டபடியினால், தங்கச் சங்கிலியை அறுத்தவர் ஒரு சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.