29.03.2016 ம் திகதி கிழக்கு மாகாண சபையின் வது சபை அமர்வு கௌரவ தவிசாளர் கலப்பதி தலைமையில் இடம்பெற்றது இவ்வமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபை குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் பொதுமக்களின் காணிகளை படையினரிடம் இருந்து அவசரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போது
புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த யுத்த காலங்களில் பொது மக்கள் குடியிருந்து வந்த இடங்களை படையினர் இதுவரை காலமும் தம் வசப்படுத்தி வைத்துள்ளனர் எனவும் எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அமுல் படுதப்பட்டு வரும் வீடற்ற அரச ஊழியர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக குச்சவெளி பிரதேச செயலகத்தினால் முதல் கட்டமாக புல்மோட்டை பிரதேசத்தில் வீடற்ற அரச ஊழியர்களுக்கான வீட்டுதிட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் காணி தேவைப்பட்டுள்ள நிலையில் கடற்படையினரால் மேலதிகமாக கையகப்படுத்தபட்ட காணிகளை அவசரமாக விடுவித்து குறித்த வீட்டுதிட்டத்தினை நடைமுறைபடுத்த இந்த சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் கடற்படையினருக்கு வழங்கபட்ட காணிகளை விட மேலதிகமாக பல ஏக்கர் காணிகளை தம் வசம் வைத்துள்ளனர் இந்த நிலை தொடர்ந்துகொண்டு செல்கிறது குச்சவெளி பிரதேச செயலாளரிடம் அரச தேவை ஒன்றுக்காக காணி கோரப்ட்டால் அதற்க்கான காணி இல்லை என்று பதில் அளிக்கிறார்
நல்லாச்சியில் வட மாகாணத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் அவ்வாறே கிழக்கில் சம்பூர் பிரதேசத்தில் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க முடியுமாக இருந்தால் புல்மோட்டை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள காணிகளை ஏன் பொது மக்களிடம் ஒப்படைக்க முடியாது எனவும் கேள்வி எழுப்பினார்
புல்மோட்டை அறிசிமலை காணி விடயமாக குறித்த பகுதியில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களுக்கான வீட்டை இன்னும் படையினர் ஒப்படைக்காமை குறித்தும் பேசியதுடன்
எனவே இதற்க்கான நியாயம் என்னவென்று வினா எழுப்பியதை தொடர்ந்து உரையாற்றிய மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி அவர்கள் இது விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடலை நடாத்தி தீர்வினை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்
அதனை தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மத் அவர்கள் இந்த நல்லாட்சியில் எந்த விடயத்திற்கும் நியாயத்தை பெற்றுதர முடியும் என்பதுடன் இந்த நாட்டின் பாதுகாப்பிற்க்கு குந்தகம் ஏற்படாத வகையில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுடன் தெளிவு படுத்தி என்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்
அதனை தொடர்ந்து சபையில் பலரும் பிரேரணை தொடர்பாக ஆதரித்து பேசியதுடன் சபை முடிவில் காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சுக்கான ஆலோசனை குழு கூட்டத்தில் ஏலவே குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணி அற்றவர்களுக்கான காணி கச்சேரி நடாத்தபட்டும் இன்னும் அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படாமை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் எழுப்பிய கேள்விக்கு கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளரினால் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் அவற்றை பிரதேச செயலாளரூடாக பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதி அளித்தார் பின்னர் அரச ஊழியர்களுக்கான வீட்டுதிட்டத்தினை அமைக்க படையினர் வசமுள்ள காணியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் காணி அமைச்சரால் உறுதி மொழி அளிக்கபட்டது
(மா.சபை உறுப்பினரின் ஊடக்கபிரிவு )