அப்துல்லாஹ்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (27) காலை 10.00 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இவ்விஷேட பொதுச் சபைக் கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் உப தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற இருப்பதாகவும் செயலாளர் அஸீஸ் தெரிவித்தார்.
சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் அங்கத்தவர்கள் நலன்கள் பற்றியும் ஆராய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடித மூல அறிவித்தலின் பின்னர் உறுப்பினர்களின் வரவை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி தொடர்பாடலிலேயே இதனை அவர் தெரிவித்தார். அத்தோடு, அன்றைய தினம் சம்மேளனத்தின் யாப்பில் திருத்தங்கள் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எக்காரணத்தையிட்டும் கூட்டம் பிற்போடப்பட மாட்டாதென்றும் அவர் தொிவித்தார்.
எனவே, சகல உறுப்பினர்களும் தவாறது கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.