ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் சுகாதார சேவையில் மாண்புறும் சம்மாந்துறையின் " எழுச்சித் தருணங்கள்"


மூத்தபோராளி-

ம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சராக பதவி வகித்த போது ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பின்வரும் கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், 

01. வெளி நோயாளர் பிரிவுக்கட்டிடம் 
02.  மருந்துக் களஞ்சியம் 
03. இயன் மருத்துவ அலகு 
04. தாதியர் விடுதிக் கட்டிடம் 
05. மூடிய நடைபாதை 
06. அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடமும், சாரதி விடுதியும் 

இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் விடா முயற்சினால் மத்திய சுகாதார அமைச்சு நிதி மூலம் 400 இலட்சம் பெறுமதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்வரும் மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

01. Endoscope 
02. Laparoscope 
03. Colonoscope 
04. X  - Ray - CR System 
05. Modern Dental Chair 

" எழுச்சித் தருணங்கள்" என்ற இரு வைபவங்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களின் தலைமையில் 2016.04.02 ஆந் திகதி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் காலை 09.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் சுகாதார சேவையில் மாண்புறும் சம்மாந்துரையின் " எழுச்சித் தருணங்கள்" நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட  மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.எல்.ஏ.அமீர், கே.எம்.அப்துல் ரசாக், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், ரி.கலையரசன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விசேட அதிதிகளாக மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மாகாண சுகாதார அமைச்சு செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சம்மாந்துறை பிரதேச செயலாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வைபவத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :