நோலிமிட் உரிமையாளரின் எளிமையான வாழ்க்கை முறை - அனுபவ பகிர்வு

F.H.A.Amjad Nintavur-

நோலிமிட் உரிமையாளரின் பேட்டி வெளியானதன் பின்னர் அவரைப் பற்றி ஆராய்ச்சிகள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  ஒருமுறை (2007) நோலிமிட் நுகேகொடை கிளைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே நோலிமிட் உரிமையாளர் branch visit வந்திருந்தார். அவருடன் வந்த top management அனைவரும் tie அணிந்து professional attire யில் காணப்பட உரிமையாளரோ மிகவும் எளிமையாக இருந்தார். 

அங்கு வந்திருந்த யாரும் அவர்தான் உரிமையாளர் என அடையாளம் காண முடியாதபடி அவரின் எளிமை இருந்தது. 

அப்போது அங்கு கடமையில் நின்ற ஒருவருக்கு பவ்வியமாக சலாம் சொன்னார். 

சொல்லி விட்டு அந்த ஊழியரின் சட்டைப்பையில் இருந்த name tag யில் இருந்த பெயரை வாசித்தார், யாசீன் என எழுதி இருந்தது. 

Marketing Management சம்பந்தமான கலைச்சொற்களோடு யாசீனிடம் உரிமையாளர் கேள்வி கேட்கப் போகிறார் என்ற என் எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. மிகவும் பணிவான குரலில், யாசினின் காதருகே மெதுவாகக் கேட்டார், "தம்பி, உங்களுக்கு சூறா யாசின் மனப்பாடமா ?". 

திகைத்துப் போனேன், திணறிப் போனேன், Successful entrepreneur ஒருவரின் ஊழியர் விசாரிப்பும் Branch visit உம் இப்படி இருப்பதே அவரின் வெற்றி என தெளிவாகப் புரிந்தது.

புத்தகங்களிலுள்ள Management Theory அனைத்தும் அவரின் முன் தோற்றுப் போனதாக உணர்ந்தேன்.

அவரைப் பற்றி மேலும் சில விடயங்கள்.

  • நோன்பு முப்பது நாளும் அவரின் தலைமைக் காரியாலயத்தில் காணப்படும் பள்ளியில் எல்லோருக்கும் நோன்பு திறக்க வைக்கிறார்.
  •  அந்தப் பள்ளியில் அவரே இகாமத் சொல்கிறார்.
  • பிள்ளைகளை ஹாபிழ்களாக்கி இருக்கிறார்.
  • வீட்டுத் தோட்டம் செய்கிறார்.
  • எந்த முகாமைத்துவ சஞ்சிகைகளிலும் கோட் சூட்டுடன் வந்து கதையளப்பது கிடையாது.
  • எல்லாவற்றையும் இறைவனிடம் சாட்டி விட்டு அமைதியாக இருக்கிறார்.
  • எத்தனையோ இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கிறார். 
  •  எல்லாக் கிளைகளிலும் தொழுகை அறை உண்டு.
  •  கொள்ளை இலாபம் ஈட்டுவது கிடையாது.
  • ஏனைய வியாபாரிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருமனதோடு இருக்கிறார். 

இறைவன், அவரின் சேவைகளை மேலும் விரிவு படுத்த வேண்டும். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -