நீதிமன்றின் யோஷித ராஜபக்சவுக்கு விடுத்த உத்தரவால் சிக்கல்...!

லெப்டினன் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில், சந்தேக நபர்கள் நீதிமன்றின் அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால் நேற்று சிக்கல் நிலை ஏற்பட்டது.

சி.எஸ்.என். விவகாரம் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்தமை , திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழும் யோஷித்த உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது. இது தொடர்பில் கடந்த மார்ச் 10ம் திகதி கடுவலை நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரின் பிணைக் கோரிக்கை மனு தொடர்பிலான விசாரணையில் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்படும் போது நீதிமன்றம் அறிவித்தல் விடுத்தால் மட்டுமே மீண்டும் மன்றில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி கடுவலை நீதிவான் தம்மிக ஹேமபால விடுத்த உத்தரவுக்கு அமைய நேற்று சி.எஸ்.என். விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு ஆஜராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணை அறிக்கையுடன் விசாரணைகளுக்கு தேவையான சில அனுமதிகளைப் பெற மன்றுக்கு வருகை தந்தனர்.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் வருகை தரவில்லை. அத்துடன் வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. நேற்றைய தினம் விசாரணைச் செய்யப்படும் வழக்குகளில் அந்த வழக்கு இல்லை என பின்னர் தெரியவரவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் ஏமாற்றத்துடன் மன்றிலிருந்து வெளியேறினர்.

இந் நிலையில் இது குறித்த வழக்குப் புத்தகத்தை பார்வையிட ஊடகவியலாளர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் சென்றனர். நேற்றைய தினம் நீதிமன்ற பதிவாளர் விடுமுறையில் இருந்த நிலையில், மற்றொரு நீதிமன்ற பிரிவில் வழக்குப் புத்தகம் வைக்கபப்ட்டிருந்தது. வழக்குப் புத்தகத்தை பார்வையிட அங்கிருந்த உத்தியோகஸ்தரிடம் அனுமதி கோரிய போது, நீதிவான் வழக்குப் புத்தகத்தை யாருக்கும் காட்ட வேண்டாம் என அறிவித்துள்ளார் என அவர் கூறினார்.

இந் நிலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இடை மனுவொன்றூடாக அடுத்த வாரம் விசாரணைகளை மீள கோரலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -