புதிதாக கல்முனையை மையமாகக் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவுப் ஹக்கீமிடம் கல்முனை அபிவிருத்தி போரம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்றை போரத்தின் தலைவர் ஏ.பி.எம்.அஸ்ஹர் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
அம்பாறை மாவட்ட மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது யாவரும் அறிந்ததே . அதில் ஓர் அங்கமாக பிரதேச மக்களின் மிக நீண்ட கோரிக்கையான கல்முனையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தாங்களும், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனறமைக்காக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் 1997ஆம் ஆண்டு அவரின் அயராத முயற்சியினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து இத்திட்டம் நிறைவடைந்ததும் கல்முனையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய காரியாலயத்தினை ஸ்தாபிப்பதற்கான திட்டத்தினை அவர் அப்போது வகுத்திருந்தார்.
அண்மைக்காலமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலம் களமுனைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக போலிப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இது முற்றுமுழுதாக ஒருசில அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் நடவடிக்கையாகும்.
கல்முனையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய காரியாலயம் ஒன்று உருவாக்கப்படக்கூடாது அப்பிரதேசம் அபிவிருத்தி அடையக்கூடாது என்பதுதான் இவர்களின் பிரதான நோக்கமாகும். ஒரு பிராந்திய காரியாலயம் உருவாகுவதில் பலவிதமான காரணிகள் செல்வாக்குச் செலுத்தகின்றன. நீர் சேவை இணைப்புக்களின் எண்ணிக்கை, பாவணையாளர்களை கையாளும் வசதி ஏற்கனவே உள்ள பிராந்திய காரியாலத்திற்கான பயணத்துாரம், பாவணையாளர்களுக்கிடையிலான தொடர்பாடல், நிர்வாக அமைவிடம், விநியோக கட்டமைப்பு போன்ற பல காரணிகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வகையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒரேயொரு பிராந்திய காரியாலயமாக அம்பாறை த்திரமே ண்டிருந்தது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது
பாவணையாளர்களின் நன்மை கருதி அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பிராந்திய காரியாலயத்தை உருவாக்க உத்தியோச அப்போது மாவட்டத்தின் மொத்தமாக சுமார் 29ஆயிரம் இணைப்புக்கள் மாத்திரமே இருந்தன.
அதில் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு உள்ளடங்கியதாக 14ஆயிரம் சேவை இணைப்புக்கள் கொண்ட சே பிரதேசங்களையும் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான இறக்காமத்துடன் சேர்ந்து புதிய பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக அக்கரைப்பற்று புதிய பிராந்தியமாக உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் அம்பாறை பிரதேசத்திலிருந்து இதற்கான எவ்வித எதிர்ப்பும் ஏற்படவில்லை. புதிய பிராந்திய காரியாலயம் உருவாகுவதன் மூலம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட பாவணையாளர்கள் மிகவும் இலகுவாக தமது சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் சுமார் 68 ஆயிரம் சேவை இணைப்புக்கள் உள்ளன. கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மணல்சேனை, மற்றும் மருதமுனை பிரதேசங்களைச் சேர்ந்த பாவணையாளர் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பிராந்திய காரியாலயத்திற்கு சுமார் 25 கிலோ மீற்றர் துாரம் பிரயாணம் செய்து முழுநாளையும் செலவளிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி புதிய பிரதேசங்களான மத்திய முகாம், சவளக்கடை, அன்னமலை, நாவிதன் வெளி, வீரத்திடல், மண்டூர் மற்றும் சாளம்பைக்கேணி போன்ற பல பிரதேசங்களில் தற்போது நீர் வழங்கல் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழை தாய் மொழியாகக் கொண்ட சம்மாந்துறை நீர் வழங்கல் காரியாலயத்தில் சுமார் 14ஆயிரம் வேவை இணைப்புக்கள் உள்ளன.
இக்காரியாலயம் தற்போது அம்பாறை பிராந்தியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச மக்களும் தமது குடி நீர் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக அம்பாறைக்கு செல்லவேண்டியுள்ளதால் அங்கு மொழிப் பிரச்சினையால் பல்வேறு பிரச்சினைக்கு தினமும் எதிர்நோக்கி வருகின்றனர்.
கல்முனைப் பிராந்தியத்திற்கான நீர் விநியோகம் தொகுதி ரீதியில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மருதமுனை, மத்தியமுகாம் மற்றும் நாவிதன் வெளி பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 36ஆயிரம் சேவை இணைப்புக்களை கொண்டதாக புதிய பிராந்தியம் ஒன்றை உருவாக்குவதில் என்ன சிக்கல் உள்ளது? என்ன பிரச்சினை உள்ளது. இதன் போது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் சுமார் 41300 ஆரம்ப சேவை இணைப்புக்களுடன் மிகவும் சிறப்பாக நீர் வழங்கல் சேவைகளைக் கொண்டு செல்லலாம்.
புதிதாக கல்முனையை மையமாகக் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய காரியாலயம் உருவாகும் போது அக்கரைப்பற்று பிராந்திய காரியாலத்திற்கு எவ்விதமான பாதிப்புகளும் . அதன் ஆளனி வளமும் பாதிக்கப்படமாட்டாது. பாவணையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும்.
கல்முனையில் தற்போது இலங்கை மின்சார சபை, பிராந்திய சுகாதரா சேவைகள் பணிப்பாளர் பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலானர் காரியாலயம், வீதி அபிவிருத்தி திணைக்களம், கடற்றொழில் மீன்பிடித் திணைக்கம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு அரச திணைக்களங்கள் காணப்படுகின்ற போதிலும் மக்களின் அத்தியாவசியமான குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் இன்மை பாரிய குறைபாடாகும். இது இப்பிராந்திய மக்களின் மிக நீண்டகாலக் கோரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அக்கரைப்பற்றினைச் சேர்ந்த ஒரு சிலரின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் இக்காரியாலயத்தை அமைப்பதற்கான முயற்சிகள் காலம் தாழ்த்துவது கவலை தரும் விடயமாகும் நீங்கள் நீர் வழங்கல் அமைச்சராக இருக்கும் இக் காலத்தில் இதனைச் செய்யா விட்டால் இனிஒருபோதும் அமைக்கமுடியாது. எனவே, கல்முனைப் பிராந்திய மக்களின் மிக நீண்டகாலக் கோரிக்கையான தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.