லசித் மலிங்கா கேப்டன் பதவியில் இருந்து விலகினார்....!

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய மலிங்கா காயத்தால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். மேலும், இலங்கை அணி இந்த தொடரில் மோசமாக தோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. 

கேப்டன் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக மலிங்கா நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக, கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -