க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் மாவனல்லை பதுரியா முதலிடம்...!

ண்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளில் 6 மாணவர்கள் 9A களைப் பெற்று சித்தியடைந்தததன் மூலம் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி சபரகமுவ மாகாணத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முன்னிலை வகிக்கின்றது. இப்பாடசாலையில் 79.2% மாணவர்கள் தமிழ் மற்றும் கணித பாடங்களிலும் 81% மாணவர்கள் கணித பாடங்களிலும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்..

சுமார் 2700 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பதுரியா மத்திய கல்லூரி கல்வி விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானத் துறைகளில் மிக வேகமாக முன்னேறி வரும் ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையில் காணப்படும் சிறந்த நிர்வாகம் அதிபர் ஆசிரியர்களின் அர்பணிப்புடனான சேவைகள் என்பன இப்பாடசாலையின் அண்மைக்கால வளர்ச்சியின் படிக்கற்கலாகும்.

மாவனல்லை பதுரியா க.பொ.த சாதாரண தரம் மட்டுமல்ல உயர்தர கலை வர்த்தக விஞ்ஞானப் பிரிவு பெறுபேறுகளிலும் முன்னிலை வகித்து வருகின்றது. இப்பாடசாலையில் நடைபெறும் Project (புரஜெக்ட்) வகுப்புக்கள் மூலம் உயர்தர விஞ்ஞான வாத்தக பிரிவுகளின் பெறுபேறுகள் மெருகூட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை பதுரியாவின் வளர்ச்சிக்கும் சாதணைகளுக்கும் பின்னால் உள்ள மற்றுமொறு மறுக்க முடியாத காரணிதான் இப்பாடசாலையின் வளர்ச்சியில் கரிசணை கொண்ட கிருங்கதெனிய சமுகம். இயக்கம் கட்சி என பேதம் பார்க்காது இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக திரண்டு வரும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் தனவந்தர்கள் பழைய மாணவர்கள் போன்றோர் கடந்த காலங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியன. மேலும் பாடசாலையின் அபிவிருத்திப் பணியில் யார் எதனைச் செய்தாலும் அவர்களுக்குப் பின்னால் நின்று ஒததுழைப்பு வழங்கும் ஒரு நல்ல பண்பு இப்பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். 

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவியர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நீண்டகாலமாக பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் இப்பாடசாலையின் தற்போதைய வளர்ச்சியின் முக்கிய காரணிகளில் மற்றுமொன்றாகும். அதிபர் ஜனாப் M.T.M நிஸ்தார் அவர்களுடன் இணைந்து பாடசாலையின் பௌதிகவள கல்வி அபிவிருத்தியிற்கு இவ்வமைப்புக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்களும் ஒத்தாசைகளும் ஓரிரு வரிகளில் எழுதி முடிக்கக்கூடியவை அல்ல.

பல்வேறு வகைப்பட்ட பௌதிக வளக்குறைபாடுகளுக்கு மத்தியில் இப்பாடசாலை கடந்த தசாப்தங்களை தாண்டி வந்த போதும் இப்பாடசாலையில் பௌதிக வளக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலையுடன் இணைந்து செயற்படும் பதுரியா அபிவிருத்தி நிதியத்தின் (BDT) செயற்பாடுகளை இப்பாடசாலையின் அண்மைக்கால வளர்ச்சியின் பின்னால் உள்ள மறுக்க முடியாத காரணிகளில் ஒன்றாக குறிப்பிடலாம். இப்பாடசாலைக்குத் தேவையான பௌதிக வளங்களை பெற்றுக் கொள்வதற்காக இவ்வமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளும் அர்ப்பணிப்புக்களும் அளப்பரியன.

அத்தோடு பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் காணப்படாமை இப்பாடசாலையின் வளர்ச்சியின் பின்னால் காணப்படும் மற்றுமொரு முக்கிய காரணியாகும். 

இப்பிரதேசத்தில் பல்வேறு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் பிரமுகர்கள் காணப்பட்டாலும் அவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கை பாடசாலை அபிவிருத்திக்காக பயன்படுத்தினார்களே தவிர தமது கட்சியின் செல்வாக்கை அல்லது தமது பலத்தை பாடசாலை நிர்வாகத்தில் பிரயோகிக்க முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகம் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களை குறைத்து மதிப்பிட முடியாது. அத்தோடு இப்பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் சங்கங்கள் என்பனவும் தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்கி வருகின்றன. 

இவ்வாறான பல்வேறு காரணிகள் காரணமாக இன்று மாவனல்லை பதுரியா பல்வேறு துறைகளில் பிரகாசித்து வருகின்றது. இப்பாடசாலையின் தரம் காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் கல்வித் தாகம் தீர்க்க மாவனல்லை பதுரியாவை நாடி வருகின்றனர். 

தொடர்ந்தும் இப்பாடசாலை கல்வி விளையாட்டு இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் போன்றவற்றில் மேலும்; வளர்ச்சி கண்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் கல்வித் தாகம் தீர்க்கக் கூடிய சிறந்த பாடசாலையாக உருவாக அல்லாஹ் அருள் புரிவானாக.
ரிப்னா ஹுசைன் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -